புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 11, 2021

புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு

 புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி:  துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு


புதுவையில் 1 முதல் 11ம் வகுப்பு பயிலும் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

CLICK HERE TO DOWNLOAD PRESS RELEASE

இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முழுவதும் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்படுகிறார்கள்.


அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10, 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழக கல்வி வாரியத்தின் வழிகாட்டுதலின் பேரில் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்படுகிறது.


மாகே மற்றும் ஏனாமில் படிக்கும் மாணவர்கள் கேரள மற்றும் ஆந்திர கல்வி வாரியங்களின் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள்.


சனி, ஞாயிறை தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் பள்ளிகள் இயங்கும். 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி வரை பள்ளிகள் இயங்கும். கோடை விடுமுறை ஏப்.1ம் தேதி முதல் துவங்கும்.

No comments:

Post a Comment