1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி:இம்மாநில அரசு அறிவிப்பு
ஒடிசா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான 8மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
பின்னர் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை புதன்கிழமை அறிவித்தது
மேலும் இதர வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டதற்கு மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்
No comments:
Post a Comment