ஒரே பள்ளியில் 56 மாணவி, ஆசிரியைக்கு கொரோனா தொற்று - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 14, 2021

ஒரே பள்ளியில் 56 மாணவி, ஆசிரியைக்கு கொரோனா தொற்று

 ஒரே பள்ளியில் 56 மாணவி, ஆசிரியைக்கு கொரோனா தொற்று


தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை 1100 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. கடந்த 11ம் தேதி பிளஸ்2 படிக்கும் ஒரு மாணவிக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து 460 மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 


இதன் முடிவுகள் நேற்றுமுன்தினம் தெரிய வந்ததில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்


இந்நிலையில் 12ம் தேதி 9, 10 மற்றும் 11ம் வகுப்புமாணவிகள் 619 பேருக்கும், ஆசிரியைகள் 35 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு நேற்று காலை வந்தது. இதில் மேலும் 36 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 37 பேரும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதுடன், ஒவ்வொரு அறையிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.


பாதிக்கப்பட்ட 56 மாணவிகளும் தஞ்சையை சுற்றியுள்ள 15கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் 15 கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர் கோவிந்தராவ் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பெரும்பாலும் அறிகுறிகள் எதுவும் இல்லை. சக மாணவிகள், பெற்றோர், கிராம மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. 15 கிராமங்களிலும் மக்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்

No comments:

Post a Comment