தடையில்லா சான்றிதழ் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு என்ஓசி மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சென்னை நகரில் ஆலந்தூர் பகுதியில் இயங்கி வரும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்த பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரவாயல் பகுதியில் விஎன்ஆர் விவேகானந்தா வித்தியாலயா என்ற பள்ளி தமிழ்நாடு மாநில அரசு மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) ஆகியவற்றின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு பெறாத பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
ஆனால், மத்திய மனித வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கும்The National Institute of Opening Schooling, New Delhiல் அங்கீகாரம் பெற்ற பள்ளி என்றுநீதி மன்றத்தில் தெரிவித்த ஆவணங்களின்படி பள்ளி செல்லா மற்றும் இடநின்ற 14 வயதுக்குட்பட்ட மாணவர்களை மட்டும் A-Level,(மூன்றாம் வகுப்புக்கு இணையானது), B-Levelமற்றும் C-Levelஎன்ற முறையில் இந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்கலாம்.
No comments:
Post a Comment