இயற்பியல், கணிதம் பாடங்கள் பொறியியலுக்கு கட்டாயமில்லை: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 12, 2021

இயற்பியல், கணிதம் பாடங்கள் பொறியியலுக்கு கட்டாயமில்லை: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு


இயற்பியல், கணிதம் பாடங்கள் பொறியியலுக்கு கட்டாயமில்லை: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு


இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களுக்கான ஒப்புதல் கையேடுவை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. 

அதில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ் , இன்ஜியனிரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ் , தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியில் படிப்புகளில் சேரலாம் என ஏஐசிடியூ தெரிவித்துள்ளது.வரும் 2021-22 கல்வி ஆண்டில் இந்த நடைமுறை செயல்பட்டுக்கு வரும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. 

கணிதம், இயற்பியல் பாடங்களை தவிர பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இணைப்பு படிப்பு ஒன்றை நடத்தும். பிளஸ் டூ தேர்வில் 45 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம். பட்டியல் இன மாணவர்கள் 40% எடுத்தால் போதும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

பொதுவாக ப்ளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை முதன்மை  பாடங்களாக எடுத்து படித்தால் தான் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப  படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில் ஏஐசிடிஇ  இத்தகைய அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. Sir.if physics chemistry bio students
    Need to understand go extra lessons
    In Engineering? Or no need..

    ReplyDelete