சிந்து சமவெளி எழுத்து பொறிப்புகள் கொண்ட பழங்கால பானை ஓடுகள் ராமநாதபுரத்தில் கண்டெடுப்பு
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்து சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளுடன் கூடிய பழங்கால பானை ஓடுகளைக் கண்டறிந்தார்.
எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 2-ம் ஆண்டு இயற்பியல் படிக்கும் மாணவர் சி.அபிஷேக். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியக் குடி, அரசநகரி, ராஜசிங்கமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய ஆய்வில் பாசி மணிகள், உடைந்த மண்பாண்டங்கள், எழுத்து பொறிக் கப்பட்ட பானை ஓடுகளைக் கண்டறிந்தார்.
இவற்றை ஆய்வு செய்த தொன்மை குறியீட்டாளர் சுபாஸ் சந்திரபோஸ், இதில் 2 பானை ஓடுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் தெளிவாகத் தெரிவதாகவும், அவை 5500-3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்துக்குச் சான்றாக உள்ள முத்திரைகளில் காணப்படும் எழுத்து வகையைச் சேர்ந்தவையாகக் கருதலாம் எனவும், விரைவில் இப்பகுதியில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவர் அபிஷேக்கை கல்லூரி துணைத் தலைவர் கே.கே.சந்தோஷ்பாண்டியன், முதல்வர் ஆர்.ராஜேஸ்வர பழனிச்சாமி ஆகி யோர் பாராட்டினர்.
No comments:
Post a Comment