ஓட்டுப்போட வருமாறு தட்டு, தாம்பூலத்துடன்வீடு வீடாக சென்ற ஆசிரியர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 11, 2021

ஓட்டுப்போட வருமாறு தட்டு, தாம்பூலத்துடன்வீடு வீடாக சென்ற ஆசிரியர்கள்

 ஓட்டுப்போட வருமாறு தட்டு, தாம்பூலத்துடன்வீடு வீடாக சென்ற ஆசிரியர்கள்


கொளத்தூர்:ஆசிரியர்கள், தட்டு, தாம்பூலத்துடன் வீடு வீடாக சென்று, ஓட்டுப்போட வருமாறு, வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.


ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து, தேர்தல் கமிஷனர் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில்,திரு.வி.க.நகர் மண்டலம், 69வது வார்டுக்குட்பட்ட பெரம்பூர், பந்தர் கார்டன் தெருவில் ஆசிரியர்கள், தட்டு, தாம்பூலம், பழங்களுடன் வீடு வீடாக சென்றனர். '


ஓட்டுப்போட வாங்க' என்று, அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்தனர்.


அழைப்பிதழில், 'தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் நடைபெற உள்ளது. அருகில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு ஓட்டளிக்க வரவேண்டும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள், 100 சதவீத ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment