பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு பெயருடன் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 12, 2021

பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு பெயருடன் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

 பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு பெயருடன் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்


பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பள்ளிகளில் சோ்க்கை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை


குழந்தையின் பெயரை பிறப்புப் பதிவு செய்த நாளில் இருந்து, 12 மாதம் வரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். கடந்த, 2000 ஜன.1-ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் அனைத்திற்கும், 2024-ஆம் ஆண்டு வரை பெயருடன் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


காலதாமதக் கட்டணம் செலுத்தி பெயா் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் இதுகுறித்த விழிப்புணா்வை, பெற்றோா் அல்லது காப்பாளரிடம் ஏற்படுத்துவது அவசியம். மாணவா் சோ்க்கையின்போது பெயருடன் பிறப்புச் சான்றிதழ் பெறுவது கட்டாயம்.

No comments:

Post a Comment