ஆசிரியர்களுக்கு கொரோனா: அரசு பள்ளிக்கு விடுமுறை
திருவெண்ணெய்நல்லுார் அருகே பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பள்ளிக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ் கடந்த பிப்ரவரி 8ம் தேதி 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பொது தேர்வுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
இந்நிலையில் ஏனாதிமங்கலம் அரசு பள்ளியில் பணியாற்றி வரும் தலைமையாசிரியருக்கு சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அதே பள்ளியில் பணியாற்றி வரும் பிற ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மேலும் ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையொட்டி பள்ளிக்கு மார்ச் 10 & 11விடுமுறை அளித்து சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா அறிவித்துள்ளார். மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்திட உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment