தேர்தல் பணி ஊழியர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு வேண்டும் : ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், அரசு ஊழியர்களின் மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மாநில பொது செயலாளர் கூறியதாவது:
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியில் பணி வழங்கிஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். போலீசாருக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்தில் ஓட்டுடச்சாவடி அமைத்து ஓட்டளிப்பது போல் அரசு ஊழியர்களுக்கு இவ் வசதி செய்திட வேண்டும்.
கடந்த தேர்தல்களில் தபால் ஓட்டுக்கள் பெறுவதில் குளறுபடிகளால் 25 சதவீத பேர் ஓட்டளிக்க இயலவில்லை.தேர்தல் பணி ஊழியர்களுக்கு மதிப்பூதியம் குறைவாக வழங்கப்படுகிறது.இதை உயர்த்திட வேண்டும். 5 நாட்கள் பணிக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ. 2050, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு ரூ.1550 வழங்கப்படுகிறது.
ஊதிய அடிப்படையில் போக்குவரத்துபடி, அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். மாற்று திறனாளிகள், இதயநோய், சிறுநீரக நோய் என கடும்நோயால் பாதித்தோர், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு விலக்கு அளித்திட வேண்டும் என கோரியுள்ளார்.
No comments:
Post a Comment