ஜூலை முதல் கல்வி ஆண்டை தொடங்க ஆலோசனை: அமைச்சர் தகவல்
பெங்களூரு: ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டை தொடங்க மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். துமகூரு சித்தகங்க கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சுரேஷ்குமார் பேசியதாவது:
``மாநில அரசு மாணவர்களின் நலன், கல்வி ஆண்டை கவனத்தில் வைத்து வரும் கல்வி ஆண்டை ஜூலையிலிருந்து ஆரம்பிக்க ஆலோசனை நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு அனைத்து வகுப்புகளில் முடிந்த அளவுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.
ஆனால் இந்த முறை ஆன்லைன் வகுப்புகள் அதிகமாக நடத்தி வருவதால் கடந்த ஆண்டு ஒரு மாதிரியான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டு மற்றொரு மாதிரியான சவால் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் எந்த மாதிரியான சவாலாக இருந்தாலும் மாணவர்களின் நலன், எதிர் காலத்தை கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்
No comments:
Post a Comment