10, 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்குப் பொதுத்தேர்வு உண்டா?- பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதை அடுத்து, தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் எதுவுமின்றித் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படிப்பைக் கருத்தில் கொண்டு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனித் தேர்வர்களுக்கும் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா/ ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. 12ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வுகள் நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்தது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ''10, 12-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்குக்கும் கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும். கரோனா சூழல் சரியாகி 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெறும்போது தனித் தேர்வர்களுக்கும் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
எனினும் 12-ம் வகுப்புத் தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. 10-ம் வகுப்புத் தனித் தேர்வர்கள், பொதுத் தேர்வெழுத விண்ணப்பிக்க வேண்டிய தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்'' என்று தெரிவித்தனர்.
கூடுதல் விவரங்களுக்கு: 14417 என்ற எண்ணைத் தனித் தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment