அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பிளஸ் 2 மாணவி
திருப்புவனம் அருகே வன்னிகோட்டை காலனியில் ஊரடங்கால் பள்ளிக்கு செல்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் 2 மாணவி கலையரசி பாடம் கற்பித்து வருகிறார்.
வன்னிக்கோட்டை காலனியைச் சேர்ந்தவர் கலையரசி, மதுரையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ஊரடங்கால் பள்ளிகள் செயல்படாத நிலையில் அவர் வசிக்கும் பகுதியிலுள்ள அரசு பள்ளி மாணவர்களை அழைத்து அவரின் வீட்டின் முன்பு சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிவித்து பாடம் நடத்தி வருகிறார்.
தினசரி காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை அனைத்து பாடங்களையும் ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்று தருகிறார்.கலையரசி கூறுகையில்; சிறுவர்களுக்கு கற்று தருவதன் மூலம் அவர்களுக்கும் பயன். எனக்கும் கற்ற பாடங்கள் மறக்காமல் இருக்கும், என்றார்.
No comments:
Post a Comment