வருமான வரி இணையதளம் ஜூன் 6 வரை செயல்படாது
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, புதிய இணையதளம்அறிமுகமாக இருப்பதால், பழைய இணையதளம், நாளை முதல், 6ம் தேதி வரை செயல்படாது' என, வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரி கணக்கு தாக்கலை, 'ஆன்லைன்' வாயிலாக செய்வதற்கு,
என்ற புதிய இணையதளம், ஜூன் 7ல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து கலந்துரையாடல்கள், பதிவேற்றம்,நிலுவையில் உள்ள செயல்கள் அனைத்தும், ஒரே பக்கத்தில் தெரியும்படி, அந்த இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய இணையதள பக்கம் அறிமுகம் மற்றும் பழைய இணைய பக்கத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும், புதிய பக்கத்திற்கு மாற்றும் பணி நடைபெற உள்ளது.இதனால்,
www.incometaxindiaefiling.gov.in
என்ற பழைய இணைய தளம், நாளை முதல் ஜூன், 6 வரை செயல்படாது. எனவே, கணக்கு தாக்கல் செய்ய விரும்புவோர், இன்று அல்லது ஜூன் 7ம் தேதிக்கு பின் தாக்கல் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment