கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 16, 2021

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?

 கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?


கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்படுவது ஏன் என்பது குறித்து அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.


 இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: கொரோனா நோயாளிக்கு நுரையீரலில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு நுரையீரல் ஆக்சிஜனை உள்வாங்கி ரத்தத்தில் தள்ள சிரமப்படும். நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் ஆக்சிஜன் தேவை.


 சிடி ஸ்கேன் எடுத்து  பார்த்தால் மட்டுமே நுரையீரல் பாதிப்பு தெரிய வரும். இப்போது பலர் காய்ச்சல் வந்தால் 3 மற்றும் 4வது நாளுக்குள் சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கின்றனர். இதில், பாதிப்பு இல்லை என்றவுடன் அலட்சியமாகி விடுகின்றனர்.


100ல் 2 பேருக்கு தான் 3 வது நாளில் நுரையீரல் பாதிப்பு இருக்கும். மீதமுள்ள 97 பேருக்கு 5 நாள் கழித்து தான் பாதிப்பு தெரியும். 5வது மற்றும் 6 வது நாளில் சிடி ஸ்கேன் எடுத்தால் நுரையீரலில் உண்மையிலேயே பாதிப்பு இருக்கிறதா  என்பது தெரிய வரும்.


 அப்போது தான் ஆக்சிஜன் எவ்வளவு கொடுக்க முடியும் என்று கணிக்க முடியும். 20 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு கொஞ்சம் மூச்சு திணறல் ஆரம்பிக்கும். நோயாளிக்கு உடல் சோர்வு ஏற்படும்.  40  சதவீதம் பாதிக்கப்படும் போது மூச்சு திணறல் வரும். ஆனால், அதை டாக்டர்களால் தான் கண்டுபிடிக்க முடியும்.


40 சதவீதத்துக்கு மேல் சென்றால் தான் மூச்சு திணறல் ஏற்படுவது நோயாளிக்கு முடியாமல் போவது தெரியும். ஆக்சிஜன் அளவு  94 இருக்கும் போது மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் தேவை இல்லை. 


ஆனால், 94 அளவுக்கு கீழ் போகும் போது ஒரு நிமிடத்துக்கு 2 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் செலுத்தப்படும். அவர்களுக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜன் அளவு 94 பல்ஸ்  ஆகிறதா என்று பார்ப்போம். இல்ைலயெனில் நிமிடத்துக்கு 4 லிட்டர் ஆக்சிஜன் செலுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


ஆக்சிஜன் அளவீடு எப்படி?


நோயாளிக்கு 4 லிட்டர் ஆக்சிஜன் செலுத்தியும் 94 பல்ஸ் வரவில்லை என்றால், 6 லிட்டர், 10 லிட்டர், 12 லிட்டர், 15 லிட்டர் என படிப்படியாக  ஆக்சிஜன் செலுத்துவோம். அதற்கு மேல் போகிறது என்றால் தனியாக உபகரணம்  உள்ளது. அதன்  மூலம் 60 லிட்டர் வரை ஆக்சிஜன் செலுத்த வேண்டும்.


 அதற்கு மேல்  சென்றால் வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. 6 லிட்டர்  முதல் 8 லிட்டர் வரை கொடுத்தால் பிரச்னையில்லை. நோயாளிக்கு 90க்கு கீழ்  ஆக்சிஜன்  அளவு வரும் போது, ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும். தொடர்ந்து அதே  நிலை 15 நாட்கள் கழித்து இருந்தால் பயப்பட வேண்டாம். அவர்களுக்கு நுரையீரல்  பயிற்சி கொடுத்தால் போதும்.

No comments:

Post a Comment