துறை தேர்வுகள் தள்ளி வைப்பு
அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட அறிவிப்பு:போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை -2 பணிக்கு, ஜூன் 8 முதல் நடத்தவிருந்த நேர்முக தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு நடத்தவிருந்த கவுன்சிலிங் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.அரசு ஊழியர்களுக்கு, ஜூன் 22 முதல், 30 வரை நடத்த விருந்த துறை தேர்வுகள், ஆகஸ்டுக்கு தள்ளி வைக்கப்படுகின்றன; தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப தேதி, ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நடத்தப்பட்ட, 14 துறை தேர்வு முடிவுகள், ஜூலை 20ல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment