வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் இலவச ரீசார்ஜ்
குறைந்த வருவாய் உடைய வாடிக்கையாளர்களுக்கு, 49 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன் இலவசமாக வழங்கப்படும்' என, ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொரோனா தொற்று காலத்தில், குறைந்த வருவாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கான, 'ரீசார்ஜ்' சலுகையை, ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது.அதன்படி, 49 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன், குறைந்த வருவாய் உடைய, 5.5 கோடி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த கூப்பன் படி, 28 நாட்கள் செல்லும்படியாகும், 38 ரூபாய் டாக் டைம், 100 எம்.பி., டேட்டா வழங்கப்படும்.
அதேபோல, 79 ரூபாய் கூப்பன் ரீசார்ஜ் செய்யும், பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, அதன் பலன் இரட்டிப்பாக வழங்கப்படும். இதன் வாயிலாக, 270 கோடி ரூபாய் மதிப்பிலான பலன்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த வாரம் முதல், இந்த பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment