தடுப்பூசி போடுவதில் யார் யாருக்கு முன்னுரிமை? தமிழக அரசு உத்தரவு
அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் முகாம்கள் நடத்தப்படும். மேலும் 18-44 வயது உள்ள யார், யாரெல்லாம் தடுப்பூசி போடலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:
மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையங்கள் மூலமாக 18-44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட பொது சுகாதாரத்துறை முடிவு செய்து இருந்தது.
அதன்பேரில், முன்களப்பணியாளர்கள், வீடுகளுக்கு சென்று பேப்பர் போடுபவர்கள், பால் விநியோகஸ்தர் மற்றும் விற்பனையாளர்கள், மருந்தக பணியாளர்கள், அனைத்து ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், போக்குவரத்துக்கழக ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், இ சேவை ஊழியர்கள், அத்தியாவசிய தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், பஸ் டிரைவர், நடத்துனர்கள், அனைத்து பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் கொரோனா நோயாளிகளுக்கு உதவி புரியும் மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள், கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும், விமான நிலைய ஊழியர்கள், கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
* மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வைத்திருப்போருக்கு வரிசையில் காத்திருக்காமல் நேரிடையாக சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment