அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 12, 2021

அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு

 அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்கு வரத்து தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளனர். 


தமிழக  போக்குவரத்து துறை முதன்மை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் இந்தச்சூழலில், தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் தொழிற்சங்க  கூட்டமைப்பு வரவேற்கிறது. 


தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள், ஒருநாள் ஊதியத்தை வழங்குவது என கூட்டமைப்பு  சங்கங்கள் முடிவு மேற்கொண்டுள்ளன.


எனவே, தொழிலாளர்களிடம் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களில்  செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment