தொடர் அங்கீகார சான்று கட்டணத்தில் விலக்கு: இளம்மழலையர் பள்ளிகள் அசோசியேஷன் வலியுறுத்தல்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தொடர் அங்கீகார சான்றிதழ்களுக்கான கட்டண விலக்கு அளிக்க வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு இளம்மழலையர் பள்ளிகள் அசோசியேஷன் வலியுறுத்தியது.
அதன் மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன் கூறியதாவது: மாநிலத்தில் 5000 இளம்மழலையர் பள்ளிகள் 2020 மார்ச் முதல் இதுநாள் வரை மூடப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் குழந்தைகளின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நடத்துவோர் 15 மாதங்களாக எந்த வருவாய் இன்றி வாடகை, பராமரிப்பு செலவுகளை செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் தாளாளர்கள் ரூ.10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்துள்ளனர். கொரோனா முற்றிலும் ஒழிந்து ஊரடங்கு வாபஸ் பெற்றவுடன் பள்ளிகளை உடனடியாக திறக்க மாநில அரசு உத்தரவிட வேண்டும்.
பள்ளிகளுக்கு முந்தைய அரசால் கொடுக்கப்பட்ட வழிகாட்டு வரைமுறையிலிருந்து முழு தளர்வுகள் அளிக்க வேண்டும். பள்ளி நிர்வாகிகளை அரசு அழைத்து பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment