ரெம்டெசிவிர் மருந்தைப் பெற இணையதளம் அறிமுகம்!
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு பதிலாக இனி இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், மருத்துவமனை விவரம், தொற்று அறிகுறி, இணைநோய் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் கவுன்டர்களில் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்தினைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்குரிய தொகையையும் அங்கேயே செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment