கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுங்கள் -அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 12, 2021

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுங்கள் -அறிவுரை

 கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுங்கள் -அறிவுரை


கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

சென்னை மாநகராட்சி கூறியுள்ளதாவது:- 


கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும்  2 மணி, 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை குப்புறப்படுக்கலாம் என்றும் கடின உடல் உழைப்பை தவிர்த்து வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் 'டாக்டர்கள் பரிந்துரைப்படி ivermectin, Azithromycin, ranitidine மாத்திரைகளை உட்கொள்ளலாம். 


 ivermectin மாத்திரையை (12 மி.கி. ஒரு முறை) 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.3 நாள் அஜித்ரோமைசின் மாத்திரை (500 மி.கி.), 5 நாள் வைட்டமின் சி (500 மி.கி.) உட்கொள்ளுங்கள். 


5 நாள் ஜின்க் (50 மி.கி.)5 நாள்  ranitidine மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.பாரசிட்டமால் 500 மிகி மாத்திரைகளை ஒரு நாளைக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும். 


கொரோனா அறிகுறி உள்ளவர்கள் போதிய நீர்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இணை நோய்கள் இருந்தால் அதற்கான மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.  


தொடர்ச்சியான காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும். கொரோனா தொடர்பான உதவிகளை பெற, 044 25619263, 25384520, 46122300 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்,'என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment