பி.எஸ்.ஆர்., கல்லூரி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி
சிவகாசி~விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 20 மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள சன்லைன் நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக கல்லூரி தாளாளர் சோலைசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் சன்லைன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி, சைபர் பாதுகாப்பு, ஆங்கில மொழிதிறன் பயிற்சி போன்ற பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்தாண்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் 5 பேர் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளத்தில் சன்லைன் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளனர்.
இந்தாண்டு இறுதியாண்டு படிக்கும் 20 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.2021~22 கல்வி ஆண்டில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை சன்லைன் நிறுவனம் மூலம் சிறப்பு ஆய்வு கூட பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனத்துடன் இணைந்து மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெறலாம், என்றார். கல்லூரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment