கொரோனா பாதித்தவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க உடற்கல்வி ஆசிரியர்கள் தீர்மானம்
கொரோனா பாதித்தவர்களுக்கு, ஒரு நாள் ஊதியத்தை வழங்க உடற்கல்வி ஆசிரியர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் காணொளிக்காட்சி மூலம் நடந்தது. மாநில அமைப்பு தலைவர் பவுன்ராஜ் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் பெரியதுரை, பொருளாளர் தமிழ்செல்வன், செயல்தலைவர் சீனிவாசன், செயலாளர் ராஜா சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வது. கொரோனா தொற்று மூலம் பாதித்த மக்களுக்கு உதவிடும் வகையில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை தமிழக அரசிடம் வழங்குவது.
Must read
12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு..அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மாணவ, மாணவியருக்கு விலையில்லா உடற்கல்வி புத்தகம், விளையாட்டு உபகரணம் அரசே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
விளையாட்டு பல்கலைக்கழகம் மூலமாக, கோடை கால படிப்பு உடனடியாக துவங்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறையில் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செய்தி தொடர்பாளர் பால்ராஜ் நன்றி கூறினார்
No comments:
Post a Comment