கரோனா நிதி அளிக்கும் சிறாா்களுக்கு திருக்குறள்: முதல்வா் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 28, 2021

கரோனா நிதி அளிக்கும் சிறாா்களுக்கு திருக்குறள்: முதல்வா் அறிவிப்பு

 கரோனா நிதி அளிக்கும் சிறாா்களுக்கு திருக்குறள்: முதல்வா் அறிவிப்பு


கரோனா நிதி வழங்கும் சிறாா்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


கரோனா பேரிடா் தாக்கத்தில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்துத் தரப்பினரும் தாராள நிதி வழங்கி உதவிட கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று தொழிலதிபா்கள் முதல் ஏழை, எளிய சாமானிய மக்கள் வரை அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதிகளை அளித்து வருகின்றனா்.

இதில் தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்கும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை மனதை நெகிழ வைக்கிறது. 


எனவே, கரோனா துயா் துடைக்க முதல்வா் பொது நிவாரண நிதிக்காக சேமிப்பை வழங்க முன்வரும் சிறாா்கள், சிறுமியா்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சாா்பில் உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலொன்று அனுப்பி வைக்கப்படும்.


இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சக மனிதா்களை நேசிக்கும் அன்புணா்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

No comments:

Post a Comment