உடற்கல்வி ஆசிரியர் காலியிடம் பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் பட்டியலை அனுப்ப, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், பல்வேறு துறை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் சில இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, போட்டி தேர்வுகள் நடத்தப் படுகின்றன. தேர்வாகும் நபர்களுக்கு, கவுன்சிலிங் முறையில் பணியிடம் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக உடற்கல்வி ஆசிரியர் பணியில், உடற்கல்வி இயக்குனர் நிலை- - 2 பதவியில் காலியாக உள்ள இடங்களின் விபரங்களை சேகரிக்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலை, 10ம் தேதிக்குள் அனுப்புமாறு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்
No comments:
Post a Comment