மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு சுயநிதி கல்லூரிகள் வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 12, 2021

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு சுயநிதி கல்லூரிகள் வரவேற்பு

 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு சுயநிதி கல்லூரிகள் வரவேற்பு


அண்ணா பல்லைக்கு உட்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத்தேர்வு மீண்டும் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.


இதன் தலைவர் அஜித்குமார் லால் மோகன் செயலர் சேதுபதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று காரணமாக அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் இணைய வழியில் நடத்தப் பட்டன. அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன


இப்பிரச்னை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.அதில் 'தேர்வு முடிவுகளில் குழப்பங்கள் இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்படும்; தேர்வுக்குரிய கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது' என அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது. 


பல்வேறு காரணங் களால் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்களும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதனால் மாணவர்கள் பெற்றோர் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment