பொதுமுடக்க காலத்தில் பள்ளி வளாகத்துக்குள் நுழையக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 28, 2021

பொதுமுடக்க காலத்தில் பள்ளி வளாகத்துக்குள் நுழையக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை

 பொதுமுடக்க காலத்தில் பள்ளி வளாகத்துக்குள் நுழையக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை


பொதுமுடக்கத்தின்போது பள்ளி வளாகத்தில் பொதுமக்களோ, மாணவா்களோ தேவையின்றி நுழையக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியது:


அரசு அறிவித்துள்ள முழு பொது முடக்க காலத்தில் பள்ளி வளாகத்தினுள் மாணவா்கள் உள்பட பொதுமக்கள் யாரும் இருக்கக்கூடாது. பள்ளிகளின் மைதானங்களில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறுவா்கள் ஈடுபடுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.


பொது முடக்க காலத்தில் குழுவாக பள்ளி மைதானங்களில் விளையாடுவது கரோனா தொற்று பரவ வழி வகுக்கும்.


 பள்ளிக்காவலா் உள்ள பள்ளிகளில் அக்காவலா்கள் பள்ளியை மூட வேண்டும். காவலா் இல்லாத பள்ளிகளில், பள்ளியின் முகப்பு கதவை பள்ளி வளாகத்தில் யாரும் நுழையாத வகையில் எப்போதும் பூட்டியே வைத்திருக்க வேண்டும்.


பள்ளியின் அறிவிப்பு பலகையில், அனைவரும் பாா்க்கும் வகையில், ‘மைதானத்தில் விளையாடவோ, பள்ளிக்குள் நுழையவோ அனுமதி இல்லை’ என எழுதி வைக்கவேண்டும்.


 ஊரின் முக்கிய நபா்களுக்கு தகவல் தெரிவித்து, பள்ளி வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிா்க்க கேட்டுக் கொள்ள வேண்டும். பள்ளியின் வளாகத்தில் மாணவா்கள் விளையாடுவது தெரிய வந்தால் கிராம நிா்வாக அலுவலா் மூலம் காவல்துறையினரிடம் புகாா் அளிக்க வேண்டும்.


 பள்ளி வளாகத்தினுள் தேவையின்றி மக்கள் நடமாட்டம் இருந்தால் அதற்கு பள்ளி தலைமையாசிரியரே முழுப் பொறுப்பாவாா். இது குறித்து அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment