ஊதியமில்லா ஆசிரியர்களுக்கு நிவாரணம் தர கோரிக்கை
தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாததால், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தினர் அனுப்பிஉள்ள கடிதம்:
பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. பலர் மாற்றுப்பணி தேடி அலையும் நிலை உள்ளது. குடும்ப செலவுகளுக்கே தடுமாறுகின்றனர். ஓர் ஆண்டாக ஊதியம் இல்லாமல் தவிக்கின்றனர்.
எனவே, ஊதியம் இன்றி தவிக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, நிவாரண தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்வி தகுதி, அனுபவம் அடிப்படையில், ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் தரப்பில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய தொகையை, ஆசிரியர்களுக்கு தாமதமின்றி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment