கல்வி நிறுவன கட்டட வரன்முறை பாதிப்பு
விதிகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை செய்யும் பணிகள், கொரோனா பரவல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன
.தமிழகத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறை படுத்தும் திட்டம் 2018ல் அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற தடையால், இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.நீதிமன்ற தடை கடந்த மார்ச்சில் நீக்கப்பட்டதால், வரன்முறை பணிகள் மீண்டும் துவங்கின.
பழைய விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்ட அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டனர். 2018ல் விண்ணப்பிக்க தவறியோர், மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி பெறப்பட்ட விண்ணப்பங்கள், அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளன.
இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:கல்வி நிறுவன கட்டட வரன்முறையில், கூடுதல் விபரங்கள், ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. கொரோனாவால் இப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய விண்ணப்பங்கள் பரிசீலனை நிலையில் உள்ளன.கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், உள்ளாட்சிகள், வருவாய் துறையில் இருந்து கூடுதல் விபரங்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கல்வி நிறுவன கட்டட வரன்முறை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் இப்பணிகள் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment