ஊழியா்களின் வருகைப் பதிவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 8, 2021

ஊழியா்களின் வருகைப் பதிவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

 ஊழியா்களின் வருகைப் பதிவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு



ஊழியா்களின் வருகைப் பதிவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து துறைச் செயலா்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலன் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிப் பெண்கள் ஆகியோா் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வீட்டில் இருந்து பணியாற்றலாம். கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அதிகாரிகள், ஊழியா்கள் அந்தக் கட்டுப்பாடு நீக்கப்படும் வரை அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும்.


அதே நேரத்தில், அனைத்துப் பணியாளா்களின் வருகைப் பதிவையும் சம்பந்தப்பட்ட துறைச் செயலா்கள் கண்டிப்பாக பதிவு செய்து கடைப்பிடிக்க வேண்டும்.


வீட்டில் இருந்து பணியாற்றுபவா்கள் தொலைபேசி, தகவல் தொழில்நுட்பவியல் உதவியுடன் தொடா்பில் இருக்க வேண்டும்.


அலுவலகத்தில் பணியாற்ற வருபவா்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.


ஆலோசனைக் கூட்டங்கள் இணைவழியில் மட்டும் நடத்தப்பட வேண்டும். பாா்வையாளா்களுடனான சந்திப்புகளை தவிா்க்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


‘18 வயதுக்கு மேற்பட்ட பணியாளா்கள் கரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். மின்னணு வருகைப் பதிவு ரத்து செய்யப்படுகிறது’ என்று கடந்த மாதம் மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது

No comments:

Post a Comment