கொரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை வழங்கிய மாணவிகள்
கொரோனா நிவாரண நிதிக்காக ஈரோட்டை, கோவையை சேர்ந்த மாணவிகள் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கினார்கள். ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் மகள் தன்ஷிகா (வயது 8). இவர் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த ஒன்றரை ஆண்டாக தந்தை தரும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்த பொதுமக்கள் நிதி வழங்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து தன்ஷிகா நேற்று அவரது தந்தை சண்முகவேலுடன் ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலத்திற்கு வந்து கலெக்டர் கதிரவனை சந்தித்தார். அப்போது, தன்ஷிகா அவரது உண்டியல் சேமிப்பு பணம் ரூ.2,500ஐ கொரோனா நிவாரண நிதியாக கலெக்டரிடம் வழங்கினார். இந்த நிதியை பெற்றுக்கொண்டு தன்ஷிகாவை பாராட்டினார்.
இவர் மட்டுமின்றி, கோவை காந்திமாநகரை சேர்ந்த பழனிச்சாமியின் மகள் பிரணவிகா (வயது 7) வழங்கி உள்ளார். இவர், 6 மாதமாக சேமித்து வைத்த ரூ.1,516-ஐ தனது தந்தையுடன் எடுத்து கொண்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐ.ஓ.பி. வங்கி கிளைக்கு சென்றார். பின்னர், வங்கி ஊழியர்கள் முன்பு உண்டியலை உடைத்து, ரூ.1,516-ஐ முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
No comments:
Post a Comment