கரோனா சிகிச்சை பெறுவோரின் மன அழுத்தத்தைப் போக்க பாட்டு பாடி உற்சாகமூட்டும் இசைக் கலைஞர்
தஞ்சாவூர் அருகேயுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் தங்கியிருப்பவர்களின் மன அழுத்தத் தைப் போக்கும் வகையில், ஆர்கெஸ்ட்ரா இசைக் கலைஞர் ஒருவர் வாரம் ஒருமுறை அங்கு சென்று, பாடல்களைப் பாடி உற்சாகப்படுத்தி வருகிறார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின்(46). இவர், ஜீவன் சுருதி என்ற பெயரில் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவை நடத்தி வருகிறார். அரிமா சங்க உறுப்பினராகவும் உள்ள இவர், இசை நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில், கடந்த 1-ம் தேதி மே தினத்தில், ஆட்சியர் ம.கோவிந்தராவின் வழிகாட்டுதலுடன் கட்டணம் எதுவும் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திய பிராங்கிளின் பாட்டு பாடி அங்கிருந்தவர்களை உற்சாகமூட்டினார்
இதையடுத்து, வாரம் ஒருமுறை அங்கு இசை நிகழ்ச்சி நடத்தும்படி ஆட்சியர் கேட்டுக்கொண்டதால், நேற்று முன்தினம் இரவு பிராங்கிளின் மீண்டும் அங்கு சென்று பாட்டு பாடினார்.
இதுகுறித்து பிராங்கிளின் கூறியது: கரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தனிமை காரணமாக மன அழுத் தத்தில் உள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் ரெட் கிராஸ் முத்துக்குமார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மே தினத்தில் 3 மணி நேரம் இசை நிகழ்ச்சியை நடத்தினேன். இதை அங்கிருந்த பலரும் ரசித்து பாராட்டினர்.
அவர்களின் உற்சாகத்தை அறிந்த ஆட்சியர், தொடர்ந்து வாரம் ஒருமுறை நிகழ்ச்சியை நடத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்பேரில், 2-வது வாரமும் இசை நிகழ்ச்சியை நடத்தினேன். இந்த இசை நிகழ்ச்சிகளுக்காக நான் எவ்வித கட்டணமும் பெறவில்லை. கரோனா சிகிச்சை மையத்துக்குச் செல்லவே அனை வரும் அச்சப்படும் நேரத்தில், நான் அங்கு சென்று, சமூக இடைவெளியைப் பின்பற்றி பாட்டு பாடி, அவர்களை மகிழ்வித்து வருகிறேன் என்றார்.
No comments:
Post a Comment