கல்வி இயக்குநர் பதவி தொடர வேண்டும்: P.G ஆசிரியர்கள் வலியுறுத்தல்
அனுபவம் வாய்ந்த கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்தது தவறான முடிவு. மீண்டும் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் மாநில தலைவர் சுரேஷ், பொது செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளதாவது:கல்வி துறையில் 100 ஆண்டுக்கும் மேல் அனுபவம் வாய்ந்ததாக கருதப்பட்ட இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமாக உள்ளது. இயக்குனருக்கு மேல் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் செயலாளர் பதவி உள்ளது. அவருக்கு கீழ் ஒரு ஐ.ஏ.எஸ்., பணியிடம் இல்லாமல் துறைசார் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக இருந்தால் வலுவான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும்.
இங்கு தேவை அதிகாரம் சார்ந்த பணி அல்ல; அனுபவம் சார்ந்த பணியிடம் தான். சட்டத் துறை, சட்டசபையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம் இல்லை. அதிகாரத்தை வைத்து மட்டும் நிர்வகிக்க முடியாது என்பதால் அனுபவம் வாய்ந்த அதே துறையை சார்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அதுபோல் கல்வித் துறை இயக்குனர் பணியிடமும்.அ.தி.மு.க.,வால் ஏற்படுத்தப்பட்ட கமிஷனர் பணியிடத்தை தி.மு.க., ஆட்சிக்கு வந்து ரத்து செய்யும் என ஆசிரியர்கள் நம்பி இருந்த நிலையில் இயக்குனர் பணியிடத்தை ரத்து செய்து ஒருங்கிணைந்த அதிகாரங்கள் கொண்டதாக கமிஷனர் பணியிடம் உருவாக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment