100% கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 28, 2021

100% கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி

 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை


100 % கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். 4 நாட்களில் 1500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசின் விதிமுறைகளை மீறி 100 % கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக அரசுப் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில்  சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் துறையின் கீழ் வரும் அனைத்து பிரிவுகளின் இயக்குநர்களுடன் அவர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஒவ்வொரு பிரிவிலும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறைபாடுகள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளுடன் அமைச்சர் கேட்டறிந்தார்.பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் படியே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடியாக எழுதியுள்ளனர்.எனவே அதை 50 % மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த முறையை அரசு தேர்வு செய்துள்ளது என கூறினார்.


No comments:

Post a Comment