கோர்ட் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக கோர்ட்களில் காலியாகவுள்ள, 3,557 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, வரும் 6ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்திலுள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில், காலியாகவுள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க, சென்னை ஐகோர்ட் அறிவிப்பு வெளியிட்டது. அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், தோட்டக்காரர், காவலர் , இரவு காவலர், மசால்ஜி, துப்பரவு பணியாளர் உள்பட மொத்தம், 3.557 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்கான நேரடி தேர்வுக்கு, இணைய தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழு விவரங்கள்
என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப் பிக்க வரும் 6ம் தேதி கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment