பெற்றோர்களிடம் உளவியல் ரீதியாக கொரோனா பயம் நீங்கினால் தான் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 28, 2021

பெற்றோர்களிடம் உளவியல் ரீதியாக கொரோனா பயம் நீங்கினால் தான் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

 பள்ளி திறப்பு எப்போது?


பெற்றோர்களிடம் உளவியல் ரீதியாக கொரோனா பயம் நீங்கினால் தான் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் தயாரிப்பது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சென்று விட்டது.

பள்ளிக் கல்வித்துறையின் கணினி பதிவேற்றத்தில் ஏற்கனவே அவர்கள் 10,11 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் இருக்கிறது.ஆதலால் எளிய முறையில் இந்த வழிகாட்டு முறையை பின்பற்றி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை தயார் செய்ய முடியும்.இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று ரிஜிஸ்டரை புரட்ட வேண்டியது இல்லை.எனவே விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.

பள்ளிகள் திறப்பு எப்போது?

தற்போது உள்ள சூழலைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் மட்டுமே வகுப்பு நடத்த முடியும்.கொரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் மூன்றாவது அலை வரும் என்கிறார்கள்.அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என கூறப்படுகிறது

எனவே ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும்.பாதிப்பு என்னதான் குறைந்து வந்தாலும் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் உளவியல் ரீதியாக பயம் இருக்கிறது.அந்த பயம் நீங்கிய பின்னர் மாணவ செல்வங்களுக்கு கேடு விளைவிக்காத நாட்களாக கருதப்படும் போது தான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment