இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 28, 2021

இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

 சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு


இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ( பொறுப்பு) என்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010 ம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது

இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் ( 2021 -- 2022) இணைப்பு கல்லூரிகளில் ( அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுய நிதி கல்லூரிகள்) சேர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் இந்த ஆண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் , ஆதரவற்ற மாணவர்கள் குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த படிப்பில் சேர இலவச கல்வி திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் 

www.unom.ac.in 

+2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இன்று முதல் பார்க்கலாம்

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment