கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 28, 2021

கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

 மாணவர் சேர்க்கை எப்போது? 


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுடன் இன்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார் .

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகிறது. அவ்வாறு செய்யக்கூடாது .தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்.

முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சலுகைகள் வழக்கம்போல தொடரும் என்று தெரிவித்துள்ளார் .கரானா பேரிடர் காலம் என்பதால் கல்லூரி மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்படுகிறது .

ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படும் ஏற்கனவே கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்து இருக்கிறோம் என்பதால் நீட் தேர்வையும் ரத்து செய்வோம் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்

No comments:

Post a Comment