சென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி செமஸ்டர் தேர்வுகள், 27ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், அனைத்து வகை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு, வரும் 27ம் தேதி செமஸ்டர் தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை பல்கலையின் இணையதளத்தில் நாளை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment