நீட் தேர்வு பயிற்சிக்கு மாதிரி பள்ளி ஏற்பாடு: 80 மாணவர்களை சேர்க்க இலக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 11, 2021

நீட் தேர்வு பயிற்சிக்கு மாதிரி பள்ளி ஏற்பாடு: 80 மாணவர்களை சேர்க்க இலக்கு

 நீட் தேர்வு பயிற்சிக்கு மாதிரி பள்ளி ஏற்பாடு: 80 மாணவர்களை சேர்க்க இலக்கு


அரசுப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதால் அரசுப் பள்ளி மாணவர்களை 2022ம் ஆண்டு நடக்கும் 'நீட்' தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியுள்ளது.


முதற் கட்டமாக கல்வியில் பின் தங்கிய கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தேசிய திறனாய்வு தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியரை 'நீட்' தேர்வுக்கு தயார் படுத்த மாதிரி பள்ளிகள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 'நீட்' தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 2ம் தேதி துவங்கியது. 


விருப்பத்தின் பேரில் மாணவர்கள் இங்கேயே தங்கி பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாதிரி பள்ளியில் பயிற்சி பெற விருப்பமுள்ள 80 மாணவ, மாணவியரை தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில், கடலூர், திட்டக்குடி, லால்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 34 பேர் முதற்கட்டமாக பயிற்சி பெறுகின்றனர். மீதமுள்ள 46 பேரின் பெயர் பட்டியல் வந்ததும் படிப்படியாக பயிற்சியில் சேர்க்கப்பட உள்ளனர்.


அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், '10க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து அனுபவம் வாய்ந்த 15 ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டு, 'நீட்' தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இதனால் பொதுத் தேர்வு எழுத உள்ள மற்ற பிளஸ் 2 மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இதனை தவிர்க்க,ஒரு சில பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மற்ற பள்ளிகளிலும் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை உடனடியாக நிரப்ப கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment