போக்குவரத்து தொழிலாளர்கள் பண்டிகை முன்பணம் எதிர்பார்ப்பு
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும்' என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் எட்டு மண்டல போக்குவரத்துக் கழகங்களிலும் 1.40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால முன்பணம் 30 நாட்களுக்கு முன் வழங்கப்படும். வட்டியில்லா இப்பணத்தை தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.1000 வீதம் பத்து மாதங்களாக நிர்வாகம் பிடித்தம் செய்து கொள்ளும்.
நவ.,4 தீபாவளியையொட்டி இதுவரை முன்பணம் வழங்குவதற்கான நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில் “ஒரு மாதம் முன்னரே முன்பணம் வழங்கினால் பயனுள்ளதாக இருந்திருக்கும். இந்தாண்டு தீபாவளி போனசும் சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்” என்றனர்
No comments:
Post a Comment