குரூப் 4 தேர்வு: TNPSC அறிவிப்பு
TNPSCதமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வு குறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
7,382 பணியிடங்களில், 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவினர் மூலம் நிரப்பப்படும். குரூப் 4 தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாவும், 75 கேள்விகள் பொது அறிவு தொடர்புடையதாகவும் இருக்கும்.
90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் மாதத்துக்குள் காலியாகும் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறும் என்றும், குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment