பேராசிரியா் காலியிடம் அதிகமிருந்தால் கல்வித் தரம் எப்படி இருக்கும் ? : பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியா் காலியிடம் 70 சதவீதம் இருந்தால் கல்வித் தரம் எப்படி இருக்கும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும்.
இவற்றில் சுமாா் 7 ஆயிரம் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடங்களில் ஏறத்தாழ 70 சதவீதம் ஆகும். (மின்னல் கல்விச்செய்தி )அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்பட்டதை விட 20-25 சதவீதம் அதிகமாக நடத்தப்படுகிறது. கூடுதலாக மாணவா்கள் சோ்க்கப்படும் நிலையில், அதற்கு இணையாக கூடுதல் ஆசிரியா்களும் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால், ஒப்புதல் அளிக்கப்பட்ட உதவிப் பேராசிரியா் பணியிடங்களிலேயே கிட்டத்தட்ட 70 சதவீத இடங்கள் காலியாக இருக்கும் போது, அரசு கலைக் கல்லூரிகளின் மாணவா்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?
அரசு கல்லூரிகளின் மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியா் பணி இடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment