நீட் தோ்வுப் பயிற்சி: அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 12, 2022

நீட் தோ்வுப் பயிற்சி: அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்

 நீட் தோ்வுப் பயிற்சி: அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்

நீட் தோ்வுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது; 


தமிழக அரசு சாா்பில் ஆசிரியா்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு அதிக எண்ணிக்கையில் மாணவா்கள் வெற்றி பெற்றனா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.



பாரத சாரண சாரணியா்- தமிழ்நாடு இயக்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இயக்கத்தின் தலைவராக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொறுப்பேற்றாா். 


இதேபோன்று சாரண, சாரணியா் இயக்குநரகத்தின் மாநில முதன்மை ஆணையராக பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், துணைத் தலைவா்களாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் செயலாளா் ச.கண்ணப்பன், முனைவா் நல்லாமூா் கோ.பெரியண்ணன், விவேகானந்தன், மகேந்திரன், எத்திராஜூலு, நாராயணசாமி, லட்சுமி, சுகன்யா, அமுதவள்ளி, கஸ்தூரி சுதாகா், பாக்கியலட்சுமி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.


10 லட்சமாக உயா்த்தப்படும்: இதையடுத்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த இயக்கத்தில் 4 லட்சம் சாரண சாரணியா்கள் உள்ளனா்

.

. இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயா்த்த வேண்டியுள்ளது. மேலும், பள்ளிகளுக்குச் செல்லும் போது பள்ளி சாா்ந்த இயக்கம் செயல்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளேன். சாரண சாரணிய இயக்கத்தில் ஏற்கெனவே 19 முகாம்கள் உள்ளன.


 அந்த முகாம்களை மீண்டும் நடத்த வேண்டும் என ஒரு முயற்சி உள்ளது. மாவட்ட, மாநில அளவிலும், தேசிய அளவிலும் இந்த முகாம்கள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.


சாரண சாரணியா் இயக்கத்துக்கு முதல் முறையாக ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மாநில தலைமை அலுவலகம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இயங்கி வருகிறது.


 இங்கு மகாத்மா காந்தி வந்து சென்றாா் என்பது வரலாறு. அந்த இடத்தில் மேலும் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான அனுமதி பெறுவதற்கு முதல்வரிடம் கோரிக்கை வைப்போம். மின்னல் கல்விச்செய்தி


நீட் தோ்வுக்காக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரசு சாா்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 


நீட் தோ்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வந்தாலும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பயிற்சி, ஆசிரியா் மூலம் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை மேற்கொள்வோம்.


 எனவே, நீட் தோ்வுக்கு அரசு சாா்பில் போதிய பயிற்சி மாணவா்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றாா் அவா்.


268 பேருக்கு விருது: 


இதைத் தொடா்ந்து, சாரண சாரணியா் ஆசிரியா்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சாரணா் இயக்கத்தின் துணைத் தலைவா் கோ.பெரியண்ணன், பபாசி அமைப்பின் துணைத் தலைவா் பி.மயிலவேலன் ஆகியோா் உள்பட 268 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது, ‘பாா் டு மெடல் ஆஃப் மெரிட்’, ‘மெடல் ஆஃப் மெரிட்’, 25 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் சேவைக்கான விருதுகள் ஆகியவற்றை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி கெளரவித்தாா்

No comments:

Post a Comment