தேசிய நல்லாசிரியருக்கு தங்க மோதிரம்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு கிராம மக்கள் தங்க மோதிரம் அணிவித்து வரவேற்றனர்.
பரமக்குடி அருகே கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன். தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ராமச்சந்திரன் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார். எப்போதுமே பள்ளிக்கு மாணவர்களின் சீருடையில் வரும் ராமச்சந்திரன் டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை பெறும் போதும் சீருடையில் சென்று பெற்றுக்கொண்டார்.
விருது பெற்ற பின் நேற்று பள்ளிக்கு வந்தார். வழக்கம் போல் சீருடையில் வந்த ஆசிரியருக்கு கீழாம்பல் ( மின்னல் கல்விச்செய்தி ) கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் மேள தாளம் முழங்க சிலம்பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம மக்கள் அவருக்கு அரை பவுன் தங்க மோதிரம் பரிசளித்தனர்.
ராமச்சந்திரன் கூறுகையில், விருது பணம் ரூ. 50 ஆயிரத்தை போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக பயன்படுத்த உள்ளேன். இதற்கான செயல் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் தெரிவித்துள்ளேன். எனக்கு பதவி உயர்வு வந்தாலும், ஏற்காமல் இதே பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற எண்ணியுள்ளேன், என்றார்
No comments:
Post a Comment