அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 12, 2022

அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி

 அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி

அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15, 17ம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடக்கிறது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 


தமிழ் வளர்ச்சி துறைக்கான 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் “நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துகளையும் சமூக சிந்தனைகளையும்  இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ்  வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது


அதற்கிணங்க அண்ணா, பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.


 பேச்சு போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். 


போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களில் இருந்து இருவர் மட்டும் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பு பரிசு தொகை ரூ.2000 வீதம் தனியே வழங்கப்படும்.


1. தாய்மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன் 2. மாணவர்களுக்கு அண்ணா 3. அண்ணாவின் மேடைத்தமிழ் 4. அண்ணா வழியில் அயராது உயரும் 5. அண்ணாவின் வாழ்விலே  என்ற தலைப்பிலும், 1. பெண்ணடிமை  தீருமட்டும் 2. தந்தைபெரியாரின் வாழ்க்கையிலே 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் 4. பெரியாரின் உலக நோக்கு என்ற தலைப்பிலும் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெறும். மின்னல் கல்விச்செய்தி


அரசு உயர்நிலைப்பள்ளி வில்லிவாக்கம், அரசு மகளிர் மேல்நிப்பள்ளி அசோக்நகர், ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஆகிய பள்ளிகளில் போட்டி நடைபெறும்.

 

கல்லூரி மாணவர்களுக்கு, 1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. அண்ணாவின் மனிதநேயம், 3. அண்ணாவின் தமிழ் வளம், 4. அண்ணாவும் தமிழ்ச்சமுதாயமும், 5. அண்ணாவின் அடிச்சுவட்டில், 1. பெண் ஏன் அடிமையானாள்?, 2. இனிவரும் உலகம், 3. சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும், 5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி, 6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் நடைபெறும். 


அம்பேத்கர் கலைக் கல்லூரி வியாசர்பாடி, ராணிமேரி கல்லூரி, பாரதி மகளிர் கலைக்கல்லூரி பிராட்வே ஆகிய கல்லூரிகளில் போட்டி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment