மாணவர்களுக்காக ஐ.ஐ.டி.,யில் புதிய திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 4, 2023

மாணவர்களுக்காக ஐ.ஐ.டி.,யில் புதிய திட்டம்

 மாணவர்களுக்காக ஐ.ஐ.டி.,யில் புதிய திட்டம்

புதிய திட்டம் 

மாணவர்களுக்காக ஐ.ஐ.டி.,யில் புதிய திட்டம்

மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரின் ஆரோக்கியத்துக்காக, 'குஷல் புரோகிராம்' என்ற நல்வாழ்வு திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதற்காகவே, சுதந்திரமான நல்வாழ்வு கணக்கெடுப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மாணவர்களுடன் தொடர்பில் இருக்க, 'மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற வகையில்,

behappy.iitm.ac.in

என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், தமிழகத்தில் செயல்படும் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் ஆதரவுடன், மாணவர்களிடம் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.

இதற்காக, 30க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும், மாணவர்களை தனித்தனியே சந்தித்து பேசி, கணக்கெடுப்பு நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கணக்கெடுப்பின் முடிவுப்படி, ஐ.ஐ.டி., வளாகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் பணிகளை கவனிப்பதற்கான அனைத்து வசதிகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment