6,7,8,9 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 26, 2024

6,7,8,9 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

 6,7,8,9 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நடப்பு (2023-24) கல்வி ஆண்டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி, ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, 6, 7-ம் வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப்பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment