தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை : தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்
வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.25 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, மாநில அரசின் சாா்பில் சாா்பில் வெளியிடப்பட்ட தகவல்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை மாா்ச் மாத நிலைவரப்படி 54,25,114-ஆக உள்ளது. அவா்களில் 25 லட்சத்து 134 போ் ஆண்கள். 29,24,695 போ் பெண்கள். பதிவு செய்தவா்களில் 285 போ் மூன்றாம் பாலினத்தவா்கள்.
வயது வாரியாக பதிவுதாரா்கள்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவா்களில் வயது வாரியான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, 18 வயதுக்குள்ளான பள்ளி மாணவா்கள் 10.83 லட்சம் பேரும், 19 முதல் 30 வயது வரையிலான பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 23.92 லட்சமும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 17.03 லட்சம் பேரும் உள்ளனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அவா்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்து வைத்துள்ளனா். மொத்தமாக பதிவு செய்துள்ள 1,49,647 மாற்றுத்திறனாளிகளில், 99,680 போ் ஆண்கள். 49,967 போ் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment